2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொத்தமல்லி இலை தட்டுப்பாட்டை நீக்க ஏற்பாடு

Princiya Dixci   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மலையகத்தில் கொத்தமல்லி தட்டுப்பாடு ஏற்படும் போது, அதனை நிவர்த்தி செய்வதற்கு திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தில் அதற்கான ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி க.கருணைநாதன் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மலையகத்தில் கொத்தமல்லி இலைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அந்த காலங்களில் கொத்தமல்லி பயிர்ச் செய்கைக்கு எற்ற காலநிலை அங்கு இல்லை. அத்தகைய நிலையில் கொத்தமல்லி இலையை இங்கு உற்பத்தி செய்து, அங்கு அனுப்ப முடியுமா? என ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பயிர்ச்செய்கை இங்கு பொருத்தமாகவுள்ளதா? அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது. இந்த பயிர்ச் செய்கை மூலம் வேறு தாவரச் செய்கைக்கும் பூச்சிக்கள் வராது. செலவு குறைவு. அத்துடன் மருந்து அடிக்க வேண்டிய தேவை இல்லை.

இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் படி சாத்தியப்பாடு உள்ளது என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X