Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 20 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொ.சோபிகா
மத்திய விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து யாழ் மாவட்டத்திலுள்ள 5575 வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு மரக்கறி நாற்றுக்களை வழங்கவுள்ளதாக வடமாகாண விவசாயத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் வெள்ளிக்கிழமை (20) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஏப்ரல், மே, நவம்பர் மற்றும் மார்கழி மாதங்களில் மரக்கறிகளில் விலை யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக 22 முன்னோடி நாற்று மேடையாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மரக்கறி விதைகளை வழங்கி நாற்று உற்பத்தி செய்கின்றோம்.
ஒரு வீட்டுத்தோட்டத்துக்கு 30 நாற்றுக்கள் என்ற வீதம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிந்து உற்பத்தி செய்த நாற்றுகள் வழங்கவுள்ளோம். இதன்மூலம் எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் 5,575 சிறந்த முறை வீட்டுத்திட்டங்களை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்.
மரக்கறி விலை அதிகரிப்பு காலங்களில் அனைத்து வகையான மரக்கறிகளையும் மக்கள் பெற்றுக்கொள்ள இது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்கின்றோம். இந்த நடவடிக்கை வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago