2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான ஜனாதிபதியின் கருத்துக்கு ஈ.பி.டி.பி வரவேற்பு

Kanagaraj   / 2015 மார்ச் 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் இலங்கை வரவு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் சாதகமான கருத்துக்களை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் இலங்கைக்கான வரவுகளின்போது ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட வேண்டுமெனவும், இலங்கையில் அம் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். 

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களைக் கொண்டிருந்த காரணத்தால், இலங்கை வருவதற்கு ஆர்வம் காட்டியிராத நிலையில், அவர்களது சந்தேகங்களைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அம்மக்கள் தாராளமாக இலங்கை வரலாமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் தெரிவித்திருக்கும் இக் கருத்துக்கள் எமது மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளன.  
இவ்விடயம் தொடர்பில் எமது மக்களுக்குச் சாதகமான செயற்பாட்டினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது மக்கள் சார்பாகத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X