Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மார்ச் 21 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளதாக சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.வதூர்தீன் தெரிவித்தார்.
இந்நடமாடும் சேவையில் கடந்த காலத்தில் தென்மராட்சி பிரதேசத்தில் தமது சொத்துக்களை இழந்து பாதிப்படைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளானவர்கள், தேசிய அடையாள அட்டை, அதன் போட்டோ பிரதி, புதிய வங்கிக் கணக்கு இலக்கம், வங்கிப் புத்தகத்தின் பிரதி, பாதிப்பு ஏற்பட்ட காணி உறுதியின் போட்டோ பிரதி, பொலிஸ் முறைப்பாட்டு பிரதி, காணி உறுதியில் பெயர் குறிப்பிட்டு இருந்தால் கணவன் மனைவியின் சம்மதக் கடிதம், பாதிப்பு ஏற்பட்ட வருட தேர்தல் இடாப்பின் பிரதி, ஆகிய ஆவணங்களை தம்முடன் எடுத்து வருவது கட்டாயமானது என அவர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025