2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கல்யாண ராமனுக்கு பிணை

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே ஐந்து திருமணங்கள் செய்து, ஆறாவதாக திருமணம் செய்ய முற்பட்ட சந்தேகத்தில் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 59 வயதுடைய நபரை, அரச உத்தியோகத்தர் ஒருவரைக் கொண்ட இரண்டு 50,000 ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (20) அனுமதியளித்தார்.

அத்துடன் குறித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி பெற்றுக்கொண்ட 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தில் 6 இலட்சம் ரூபாய் பணத்தினை முதற்கட்டமாக வழங்குவதாக உறுதியளித்த சந்தேகநபர், 6 மாதங்களின் பின்னர் மிகுதி 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை வழங்குவதாக தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி கரவெட்டி கிழக்கு பகுதியில் உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த மேற்படி நபர், 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பெற்றிருந்தார். திருமண ஏற்பாடுகளும் வல்லிபுர ஆழ்வார் கோயில் பகுதியில் நடைபெற இருந்த நிலையில், மேற்படி நபர் ஏற்கனவே ஐந்து திருமணங்கள் செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X