2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வீதி ஒழுங்கு விதிகளை மீறியோருக்கு தண்டம்

George   / 2015 மார்ச் 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதியில் மதுபோதையில் வீதி ஒழுங்கு விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற மூவருக்கு 33 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் சாரதி அனுமதிப்பத்திரத்தை 9 மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

கிளிநொச்சிப் பகுதியில் மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரம் காப்புறுதிப்பத்திரம் வரியனுமதிப்பத்திரம் இன்றியும் பதிவு செய்யப்;படாத மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்;ற ஒருவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த குற்றச்சாட்டுக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மது போதையில் மோட்;டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவரைக் கைது செய்த கிளிநொச்சிப் பொலிஸார் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த குற்றவாளிக்கு 7,500 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் சாரதியனுமதிப்பத்திரத்தை 9 மாத காலத்திற்கு நீதவான் இடைநிறுத்தி வைத்தார்.

இதேபோன்று முச்சக்கர வண்டியை ஒழுங்கீனமாக செலுத்திச் சென்ற ஒருவருக்கு ஐநூறு ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X