2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பாடசாலை செல்லாமலிருந்து சிறுவர்கள் 9 பேர் மீட்பு

George   / 2015 மே 07 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் கலைமதி பகுதியில் பாடசாலை செல்லாமல் வீடுகளில் இருந்த 9 சிறுவர்கள் வியாழக்கிழமை (07) கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீண்டும் பாடசாலை செல்வதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அச்சுவேலி பொலிஸார், வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் யோகேஸ்வரி சுரேஸ்குமார், புத்தூர் கலைமதி சனசமூக நிலையத்தினர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் பாடசாலைக்குச் செல்லாதிருந்த 9 சிறுவர்கள் அடையாளம்; காணப்பட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்டு, அச்சுவேலி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணங்கள் அறியப்பட்டன. அதிகமான சிறுவர்கள் வறுமை, பெற்றோரின் அக்கறையின்மை போன்ற காரணங்களால் பாடசாலைக்குச் செல்லவில்லையென்பது தெரியவந்தது.

பாடசாலைக்கு மீண்டும் செல்லவேண்டும் என்பதன் முக்கியத்துவம், அறிவுரைகள் கூறப்பட்டு, கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் அந்தச் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் மீளவும் பாடசாலையில் இணைப்பதற்கான நடவடிக்கையை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்டார்.

பிரதேச செயலாளர் ஊடாக இந்த 9 சிறுவர்கள் பாடசாலைகளில் இணைப்படவுள்ளதுடன், அதன்பின்னர் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இந்தச் சிறுவர்கள் கண்காணிக்கப்படுவர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .