2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தில் அலைபேசி ஒலிக்க விட்டவருக்கு அபராதம்

George   / 2015 மே 07 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்றபோது, அலைபேசியை ஒலிக்க விட்ட 55 வயதுடைய நபருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், புதன்கிழமை (06) தீர்ப்பளித்தார்.

வழக்கு ஒன்றுக்காக வருகை தந்திருந்த நபரின் தொலைபேசி, அதிக சத்தமாக ஒலித்ததையடுத்து, அங்கு நின்ற பொலிஸார் அவரைக் கைது செய்து நீதவானின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.

அவரைக் கடுமையாக எச்சரிக்கை செய்த நீதவான், அபராதம் விதித்து விடுவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .