2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருட்டு சந்தேக நபருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைதண்டனை

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான பாற்பண்ணைவீதி, திருநெல்வேலி பகுதியினை சேர்ந்த நபருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 06 மாதகால சிறைதண்டனை விதித்து பருத்தித்துறை மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, வெள்ளிக்கிழமை (08) தீர்ப்பளித்தார்.

கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி, நெல்லியடி திருமகள் ஜோதி வீதியில் உள்ள வீடொன்றில் 10,000 ரூபாய் பெறுமதியானது துவிச்சக்கர வண்டியினை சந்தேகநபர் திருடியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திருநெல்வேலி பகுதியினை சேர்ந்த (19) வயதுடைய சந்தேகநபரை, துன்னாலை பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை (08) பருத்தித்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சந்தேகநபருக்கு எதிரான குற்றப்பத்திரம் பொலிஸாரால் மன்றில் வாசிக்கப்பட்டது.

சந்தேகநபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, 5வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .