Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 09 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
அண்மையில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள வீதிகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை புனரமைப்பு செய்வதற்கான செலவுகளை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்தார்.
மீள் குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய வீதிகள் இனங்காணப்பட்டு அதனை புனரமைப்பு செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேபோல அப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை புனரமைப்பு செய்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் கணக்கெடுக்கப்படுகின்றது. ஓரிரு கிழமைகளுக்குள் அவை கணக்கெடுக்கப்பட்டு உரிய அமைச்சுக்களுக்கு கொடுக்கப்படும்.
வீதிகளை புனரமைப்பு செய்வதற்கே பாரிய நிதி தேவைப்படுகின்றது. அதற்குரிய போதிய நிதி வசதி தற்போது இல்லை. இந்த வருடத்திற்கான பட்ஜெட் ஒதுக்கப்பட்டு அவற்றுக்கான வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதனால் இவற்றுக்கு நிதி போதாமையாக உள்ளது.
இந்த வருட பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்படாமையால் இதனை விஷேட தேவையாக கருத்தில் கொண்டு உயர் மட்டத்துடன் கலந்துரையாடி நிதியினை பெற தீர்மானித்துள்ளோம்.
மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களுக்கு போதிய நிதி வசதி உண்டு. அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பதற்கு தொண்டு நிறுவனங்களும் உதவி செய்வதனால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago