Mayu / 2024 மார்ச் 11 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 09 ஆம் திகதி சனிக்கிழமை 22 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.
பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026