Editorial / 2024 மார்ச் 09 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சியானது சனிக்கிழமை (09) ஆரம்பமாகியுள்ளது.
இந்த கண்காட்சியானது எதிர்வரும் 10ஆம் திகதிவரை காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடைபெறும்.
பாடசாலை சீருடையில் வரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம். ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும்.
இந்த கண்காட்சி மூலம் பெற்றுக் கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்திற்கும், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் 73ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண அனுசரணையை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப் படை பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஸரல் உதயனீ ராஜபக்சவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.


2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026