2025 மே 16, வெள்ளிக்கிழமை

அதிபர் விடுதி திறப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்துக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டத்தின் கீழ், யாழ்.- அச்சுவேலி மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட அதிபர் விடுதி, இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் காட்சித் தலைவருமான மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்தார்.

குறித்த பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள்  அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .