Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 07 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி. விஜித்தா
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தை நடத்துவதா, இல்லையா என்பது குறித்து, மத்திய சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவின் கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்த வருடாந்த உற்சவம் சம்பந்தமாக முடிவெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் இதன் காரணமாக அதனை மத்திய அரசின் அனுமதியோடு அதனை நடத்துவது பற்றி தீர்மானிக்கப்படுமெனவும் கூறினார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையில் தற்போது யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகள், கொரோனா தாக்கம் காரணமாக மீளத் திறப்பது சாத்தியமில்லை எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன், யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் எதிர்வரும் நாள்களில் கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
58 minute ago