Janu / 2024 ஜனவரி 11 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில், உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியூலன்ஸ் படகு வர தாமதமாகியதால் இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று புதன்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
அனலைதீவை சேர்ந்த 23 வயதுடைய தர்சன் எனும் இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தினால் படுகாயமடைந்த இளைஞனை கடல் தாண்டி ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக அம்பியூலன்ஸ் படகுக்காக காத்திருந்தபோது, படகு வர தாமதமாகியதால் கடற்படையினரின் விரைவு படகின் மூலம் இளைஞனை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும் தீவகத்திற்கான வைத்திய வசதிகளை செய்து தருமாறு பல வருடங்களாக கோரிக்கையிட்டு வருகின்ற போதிலும், வைத்திய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் கடல் தாண்டி வேறு வைத்தியசாலைக்கு செல்வதற்கு எந்நேரமும் கடலின் நிலைமை சாதகமாக இருக்கும் என சொல்ல முடியாத்தால் தீவுகளில் உள்ள வைத்தியசாலையை மேம்படுத்தி வைத்திய வசதிகளை செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.றொசாந்த்
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025