Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இவ் இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
தன்னை பொலிஸார் கைது செய்தில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக மல்லாகம் நீதிமன்றில் விண்ணப்பம் செய்து முன்பிணை கிடைக்கப்பெற்ற நிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் அபிவிருத்திக்கு ஒருபோதும் தடையில்லை. எமது மக்கள் நீண்டகாலமாக அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்டே இருக்கின்றனர். அப்படியிருக்க எமது சபையினால் முழுமையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு நிதி வளம் போதாது என்பது சகலரும் அறிந்த விடயம்.
“இந்நிலையில் எமது பகுதிகளுக்கு அற்பசொற்பமான அபிவிருத்திகளே தென்னிலங்கையுடன் ஒப்பிடும் போது மத்திய அரசிடம் இருந்து கிடைக்கின்றன. வழங்குகின்ற அபிவிருத்திகளை நாட்டின் அதிகாரப்பகிர்வு வழிவகைகளில் ஒன்றாக அமைகின் உள்ளூராட்சி மன்றகளின் சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறாது நடைமுறைப்படுத்துங்கள் என்றே கேட்கின்றோம். உள்ளூராட்சி மன்றங்களைப் புறந்தள்ளி, அரசியல் நோக்கங்களுக்காக மாத்திய அரசாங்கத்தின் பொறிமுறை செயற்படக்கூடாது.
“இதனை நான் வலியுறுத்துகையில், ஜனநாயக ரீதியிலான அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில் என் மீது அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் கட்டவீழ்த்து விடப்படுகின்றன. எமக்கு எதிராக அரச திணைக்களங்களை அழுத்தங்களைப் பிரயோகித்து, திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகின்றன” என்றார்.
20 minute ago
21 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
1 hours ago
5 hours ago