2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அறிக்கையும் மகஜரும் கைளிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்,எம்.றொசாந்த்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான நடை போராட்டத்தின் ஊடக அறிக்கையும் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்திய மகஜரும் ஐ.நா யாழ்ப்பாண அலுவலத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று கையளிக்கப்பட்டது.

ஐ.நா சபை ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்துமாறு கோரியே, இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அநுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை. இதன் காரணமாக இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் யாழ்., நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X