Editorial / 2024 ஜனவரி 18 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை பொலிஸார் புதன்கிழமை (17) கைது செய்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது, அவர் பல்வேறு நபர்களிடமும் மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரது தனிப்பட்ட வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பண பரிமாற்றங்களும் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago