2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மார்ச் 23 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வழியுறுத்தி, தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நடவடிக்கை  இன்று (23) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன். அவரது மனைவி அண்மையில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனுக்கு 9 மற்றும் 11 வயதில் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளனர். தாயை இழந்த குறித்த இரு பிள்ளைகளும் இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளனர். எனவே அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை பொது  மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதனை வலியுறுத்தி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரும்பிய பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X