Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 21 ஆலயங்களில், 07 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்த இராணுவத்தினரால் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 07 ஆலயங்களுக்கு சென்று வழிபடவே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
ஆலய வழிபாடுகளுக்கு செல்ல விரும்புவோர், தமது பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஆலய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறும், நிர்வாகத்தினர் விபரங்களை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றில் கையளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினரே மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.றொசாந்த்
8 minute ago
21 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
48 minute ago