Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 6 இழுவைப் படகுகளை அரச உடமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டது.
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடித்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 6 இழுவைப் படகுகள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு படகுகள் தொடர்பான வழக்கு நேற்று (05) ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெற்றது.
அதன் போது குறித்த படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு மீன் பிடி படகுகள் அரசுடமையாக்கப்படுவதாக நீதிவான் உத்தரவிட்டார்.
அதேவேளை தங்கச்சிமடம் மற்றும் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு படகுகளுக்கான விசாரணையின் போது உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜரான படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சமர்பித்த ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வழக்கின் தீர்ப்பை வரும் 14ஆம் திகதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
2 hours ago
3 hours ago