2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 14 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில்  இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு 8 மீனவர்களையும் காங்கேசன்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனையடுத்து 8 மீனவர்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்று (14) ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் முன்னிலையில் எடுத்தக்கொள்ளப்பட்ட போது, எட்டு மீனவர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி இருவரது கல்வியை கருத்தில் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த படகு விபத்தில் இரமேஸ்வரத்தை சேர்ந்த முனுசாமி எனும் மீனவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .