Editorial / 2019 ஜூன் 27 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செந்தூரன் பிரதீபன்

இலங்கை கடற்பரப்பில் அன்மித்த கட்ச்சதீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரும் காங்கேசன்துறை கடற்படையினரால் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று மாலை கச்சதீவுக்கு மேற்கே ஒரு ரோலர் படகில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய மீனவர்கள் நான்கு பேர் ஒரு விசைப்படகுடன் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான மீனவர்கள் இன்று காலை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணை பின்னர் சட்ட நடவடிக்கைக்காக யாழ் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடித்த மீனவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
16 minute ago
23 minute ago
27 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
27 minute ago
54 minute ago