எம். றொசாந்த் / 2019 மார்ச் 14 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன அழிப்பிற்கு நீதிகோரி யாழில் நடைபெறவுள்ள எழுச்சிப் பேரணிக்கு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“எதிர்வரும் சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக்கழக மாணவர்களாலும், பல்கலைக்கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
28 minute ago
45 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
55 minute ago
1 hours ago