Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நின்ற இளைஞன் மீது இன்று (23) கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வடமராட்சியைச் சேர்ந்த சிறீரங்கநாதன் மயூரன் (வயது 25) என்ற இளைஞனே படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் உள்ள வழக்கொன்றுக்காக சென்று விட்டு பஸ் நிலையத்தில் நின்ற போதே கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞரை கத்தியால் குத்திய வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025