2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர் தாக்குதல்

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.ஏழாலை பகுதியில் சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏழாலை மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்துள்ள ஏழாலையைச் சேர்ந்த இரு சகோதார்களான 25 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், வீட்டில் இருந்த தம்மை பிரதேச உறுப்பினர் தொலைபேசி ஊடாக அழைத்திருந்தார். அதன் பிரகாரம் நாம் அங்கு சென்றபோது அவரும் அவருடன் நின்ற 5 க்கும் மேற்பட்டவர்கள் எம்மை தாக்கினார்கள் என தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X