Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 05 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக உடற்பருமன் எதிர்ப்பு தினத்தையொட்டி, அது தொடர்பிலான நடவடிக்கை, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றெமான்ஸால் நேற்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்திசாலை வெளி நோயாளர் பிரிவில், எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த நிகழ்வில், உடற்பருமன் பற்றிய விழிப்புணர்வு, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், உடற் திணிவுச் சுட்டி அளவிடல், உடற்பயிற்சியின் நன்மைகள் போன்றவை தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு ஊட்டும் செயற்பாடுகள், தெளிவூட்டல்கள் போன்றவற்றை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் வழங்குகின்றனர்.
'உடற்பருமன் பற்றிக் கதைப்போம்' என்னும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், அனைவரையும் பங்குகொண்டு, பயன்பெற்று ஆரோக்கியமாக வாழுமாறு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது. (N)
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago