Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏட்டுச் சுவடிகளை ஆவணப்படுத்துவதுக்கான கண்காட்சி மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இல.185 ஆடியபாதம் வீதி, கொக்குவிலில் இடம்பெற்றுவரும் இக் கண்காட்சி நேற்று (14) ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இக் கண்காட்சியில் விநாயக புராணம், தோம்பு, மாந்திரீகம், சித்த மருத்துவம், மாணிக்கவாசகர் சரித்திரம், தென்கோவில் புராணங்கள், கந்தபுராணங்கள் என 100 க்கும் அதிகமான சுவடிக் கட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
அத்தோடு சுவடிகள் பாதுகாக்கப்படும் முறைகளும் காண்பிக்கப்படுகின்றன. ஈ.ஏ.பி-1056 திட்டத்துக்கமைவாக 60,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 25,000 க்கும் அதிகமான சுவடிப்பக்கங்கள் கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றன.
பிரித்தானிய நூலகத்தின் சர்வதேச நியமங்களைப் பின்பற்றி முன்னேடுக்கப்படும் இச்செயற்றிட்டம் மூலம் ஆவணப்படுத்த வாருங்கள் என ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
21 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago