Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வடமாகாணத்தில் கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட நேரமாக பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள்,
சிற்றுண்டி விநியோகத்தினர் என பலதரப்பட்டவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக எரிபொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கிறார்கள்.
அவ்வாறு வரிசையில் நிற்கும் போது ஒத்துழைப்பின்மை காரணமாக பிரச்சினைகள் எழுகின்ற நிலையில் எரிபொருளை வழங்க முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் சீராக கிடைக்கும் வரை கிடைக்கக்கூடிய எரிபொருட்களை பகிர்ந்தளிப்பது காவல்துறை மற்றும் இராணுவம் உள்ளுராட்சி அமைப்புக்கள் அரச திணைக்களங்களுடன் இணைந்து பொதுமக்கள் குழப்பமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு ஆளுநரால் தெரிவிக்கப்பட்ட கடிதம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவினால் நேற்று உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்டுள்ளது. (R)
5 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago