2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

கட்டு துப்பாக்கியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்

Janu   / 2026 ஜனவரி 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் கட்டு துப்பாக்கியொன்று வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்

கருப்பையா பத்மநாதன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் இறால் பிடிப்பதற்காக திங்கட்கிழமை (05) அன்று வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள சிறு கடலுக்கு சென்றுள்ளார். இதன் போது அங்கு மிருகங்களை வேட்டையாடுவதற்கு பொருத்தப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி எனப்படும் வெடி மருந்தில் சிக்கிய அவர் படுகாயமடைந்துள்ளார்

காயமடைந்தவர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

அண்மைய காலங்களில் சட்டவிரோதமாக மிருகங்களுக்கு வைக்கப்படும் வெடி மருந்துகளில் சிக்கி பொதுமக்கள் காயமடைந்த சம்பவங்கள்  சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.   

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .