Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
கருணாவுக்கு வக்காலத்து வாங்கும் இந்த அரசாங்கம், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் நேற்று (25) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கருணாவின் தகவல்களைக் கொண்டே புலிகளை அழித்ததாகவும், அவர் காப்பாற்றப்பட வேண்டியவர் எனவும் ஆளும் தரப்பில் இருக்கக் கூடிய பலர் குரல் கொடுத்து வருகின்றனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாவின் வரலாறு இரகசியமானதல்ல என்று பிரதமரும், எதிர் எதிர் கட்சியினருக்கு பதிலடி கொடுத்துள்ளாரெனத் தெரிவித்துள்ள அவர், ஏற்கெனவே கருணா என்பவர் மஹிந்த தரப்பினரால் அழகுபார்க்கப்பட்டவர்தான் எனவும் கூறியுள்ளார்.
உங்களது தேவைக்கேற்ப நீதியை உங்களால் வாங்க முடியுமாக இருந்தால், சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள் எனவும் சுரேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025