Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
எதிர்வரும் 25 ஆம் திகதி வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய ஹர்த்தலை அனுஷ்டிப்பதுக்கு முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பினை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதுக்கு திட்டமிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும், தமது உறவுகளுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து மாபெரும் பேரணி ஏ - 9 வீதி ஊடாக நகர்ந்து டிப்போசந்தியை அடைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் மகஐர் கையளிக்கப்படும் எனவும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய ஹர்த்தலை அனுஷ்டிப்பதுக்கு முழுமையான உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago