Freelancer / 2022 நவம்பர் 18 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் வட்டக்கச்சி - கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் ஜெயகரன் (வயது 33) என்ற நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக ஆறு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் தேடப்பட்டு வந்த ஒரு நபர் கொழும்பு - 13 பகுதியில் ஒளிந்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்த தடுப்பு (இரணைமடு) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாரதிபுரம் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணை நிறைவு பெற்றதும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. R
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago