2025 மே 08, வியாழக்கிழமை

குதிரைகளுக்கு சூடு வைத்தால் இனி சிக்கல்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

நெடுந்தீவில் உள்ள குதிரைகளுக்கு,  குறி சூடு வைப்பவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

நெடுந்தீவில், உரிய கண்காணிப்பு மற்றும் பராமரிப்புகளின்றி குதிரைகள் பல இறந்து வருகின்றன. இந்நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர், குதிரைகளுக்கு குறி சுடு வைத்து, குதிரைகளை உரிமை கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு குறி சுடும் போது, குதிரை குட்டிகளுக்கும் குறி சுடுகின்றனர். 

இதையடுத்து, இது தொடர்பில் கவனம் செலுத்திய வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், குறி சுடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும், குறி சுடும் நபர்களின் குற்றங்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படுமாயின்,  40 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபாய் வரையில் நீதிமன்றால் அபராதம்  விதிக்கப்படும் எனவும் கூறினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X