Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
J.A. George / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், கை, கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் இருந்து மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று (30) இரவு 11 மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தன்னை குழுவொன்று கடத்திச் சென்று தாக்கியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தினருக்கு சொந்தமான வயல் காணியில் ஒரு குழுவினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர்
இந்த நிலையில், மணல் கடத்தல்காரர்களுக்கும் காணி உரிமையாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுடன், மணல் கடத்தல் குழுவினர் கடந்த சனிக்கிழமை மாலை காணி உரிமையாளரின் வீட்டிற்கு வாள்களுடன் சென்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
அதுதொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், பொலிஸார் உடனடி நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியது.
இதன்போது, குறித்த வீட்டார் தஞ்சமடைந்திருந்த அயல் வீட்டுக்கு சென்ற குழுவினர், அவர்களை தாக்க முற்பட்ட நிலையில் தஞ்சமடைந்த வீட்டை சேர்ந்த நபர் அதனை தடுக்க முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த குழுவினரின் தாக்குதலில் காயமடைந்த சின்னத்துரை துரைராசா (வயது 68) என்ற நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், காணிக்கு சொந்தமான குடும்பத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்ற இளைஞன் சனிக்கிழமை மாலை குடிதண்ணீர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வடமராட்சி முராவில் பகுதியில் சேதங்களுக்கு உள்ளான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
இந்த நிலையிலேயே காணாமல்போன இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago