Editorial / 2019 ஜூன் 19 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஓட்டோவும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில், பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கோவில்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓட்டோவும் சிதம்பரபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், கோவில்குளத்தில் நேருக்கு நேர் மோதுண்டுள்ளன.
இதன்போது, ஓட்டோவில் பயணித்த நான்கு மாணவர்களும் 44 வயதுடைய ஓட்டோ சாரதியும் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
23 minute ago
27 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
27 minute ago
54 minute ago