2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சடலத்தில் இருந்த நகைகள் கொள்ளை

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மரண சடங்கில் சடலத்தில் இருந்த 10 பவுண் நகைகளை திருடர்கள் கொள்ளையிட்ட சம்பவமொன்று, வடமராட்சி - வதிரி பகுதியில், சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

குறித்த பகுதியில், வயோதிப பெண்ணொருவரின் மரண சடங்கின் போது, உறவினர்கள் கிரியை ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த போதே, அவர்களுக்கு இடையில் ஊடுறுவிய திருடர்கள், சடலத்தில் இருந்த சங்கிலி, வலயல், தோடு என பத்து பவுண் நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில், உறவினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .