2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சி.வி - திருமாவளவன் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இன்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,  யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, திருமாவளவன் நேற்று தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், யாழ்., கோவில் வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து  நினைவுப் பரிசொன்றையும் விக்னேஸ்வரன் வழங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X