Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ,நோயாளர் காவு வண்டியுடன் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த வர்த்தகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ் தர்மதாஸ் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்.நகர் பகுதியில் வர்த்தக நிலையம் நடாத்தி வரும் , இவர் , வர்த்தக நிலையத்தை மூடி விட்டு , மோட்டார் சைக்கிளில் தனது வீட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது , ஆனைப்பந்தி சந்திக்கு அருகில் வைத்து நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக
தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எம்.றொசாந்த்

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026