Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
சிங்களவர்களிடம் இருந்து தமிழர்களுக்கு இந்தியா எதையும் பெற்றுத் தராது என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் போராட்டம் ஆரம்பித்து 2,200ஆவது நாளான இன்று (27) வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்,
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கோ. ராஜ்குமார், “இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளைப் பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது.
“இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வடக்கு-கிழக்கு இணைப்பு, குருந்தூர் மலை, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை அனைத்தும் இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக் காட்டுகின்றன.
“ஒருவேளை, இந்த இலங்கையின் நீதித்துறை சிங்களவர்களுக்குப் பயன்படலாம். வடக்கு, கிழக்கில் தமிழ் நீதியரசர்களின் தீர்மானம் எதுவாக இருந்தாலும், அரசாங்கமோ, கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றங்களோ, உச்ச நீதிமன்றமோ அதனை மதிக்காது நிராகரித்துவிடும்.
“எனவே, தமிழர் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவியை தமிழர்களாகிய நாம் அனைவரும் கோர வேண்டும்.
“சிங்களவர்களிடம் இருந்து இந்தியா தமிழர்களுக்கு எதையும் பெற்றுத் தரும் என்று நம்ப வேண்டாம். அவர்கள் தமிழர்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள்.
“ரஷ்யாவின் புட்டின் மற்றும் அவரது தளபதிகளால் உக்ரைன்கள் மீதான கொடூரமான கொலைகளைக் கண்டிக்காமல் ஐ.நா வாக்கெடுப்பில் நடுநிலை வகித்ததால் இந்தியா தனது மனித உரிமை அந்தஸ்தை இழந்தது.
“ஐ.நா.வின் வாக்கெடுப்புக்குப் பிறகு இந்தியா உலகளவில் தனது செல்வாக்கை இழந்தது. நமது இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம்” என்றார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
3 hours ago
7 hours ago
9 hours ago