Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணத்தில், செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, மாபெரும் எழுக தமிழ்ப் பேரணியொன்றை நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவையும் அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தீர்மானித்துள்ளதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று (20) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு வெளிக்காட்டும் முகமாகவும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தியும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், குறைந்தபட்சம் மேற்கண்ட விடயங்களுக்கான உத்தரவாதத்தைக் கோரியுமே, எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
16 May 2025