Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன், செந்தூரன் பிரதீபன்
படகு பழுதாகி, இலங்கைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்த 4 இந்திய மீனவர்களை, 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று (02) உத்தரவிட்டார்.
மண்டபத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று (01) வந்த குறித்த 4 இந்திய மீனவர்களும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சூறைகாற்று காரணமாக, அவர்கள் பயணித்த படகு பாறையில் மோதி சேதமடைந்தது.
இதனால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களும், படகை மீட்டுத் தருமாறு உதவி கோரி இலங்கைக் கடற்படையினரிடம் தஞ்சமடைந்தனர்.
இவ்வாறு தஞ்சமடைந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்து, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில், நேற்று (02) ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
21 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago