2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’தப்பிச்சென்றோரை அனுப்புமாறு அரசாங்கங்களிடம் கோரவுள்ளோம்’

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்புமாறு,  தப்பிச்சென்று தஞ்சம் புகுந்துள்ள நாடுகளின் அரசாங்கங்களிடம் கோரவுள்ளதாக, வடமாகாண சிரேஷ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலுள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்றும் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் கூறிய அவர், இவ்வாறான நபர்களை, மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு, அந்தந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரவுள்ளதகாவும் இந்நடவடிக்கை, பொலிஸ்மா அதிபரூடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X