2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளி தினத்தில் நால்வர் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற 3 மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ஏ-9 நேற்று (06) இரவு 7 மணியளவில் எரிபொருள் தாங்கி வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செல்வ நகரை சேர்ந்த செ.கஜீபன் (வயது 18) மற்றும் கௌரீசன் தனுசன் (வயது 19) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை யாழ்.குப்பிளான் பகுதியில் நேற்று (06) மாலை மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணிந்த இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த தூணுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதே இடத்தை சேர்ந்த செ.நிரோசன் (வயது 20) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நல்லூர் சங்கிலியன் வீதியில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  கோப்பாய் வடக்கை சேர்ந்த சி.தர்மசீலன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .