Editorial / 2019 மே 15 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.விஜித்தா
யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம், தேவரிர்குளம் பகுதியில், இன்று (15) காலை, அநாமதேயமாக நிலையில் காணப்பட்ட இரு தேசிய அடையாள அட்டைகள், யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு அடையாள அட்டைகளும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுடையதெனவும் அவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.
காலை (15), தேவரீர்குளம் பகுதியில் உள்ள குளத்தடிக்குக் குளிக்கச் சென்ற பொதுமக்கள் சிலர், அப்பகுதியில் அநாமதேயமாக இரண்டு அடையாள அட்டைகள் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, இது தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இரு தேசிய அடையாள அட்டைகளையும் மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் இணைந்து, அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
39 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
46 minute ago
1 hours ago