Freelancer / 2022 ஜூலை 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 4 பேர், அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதில், வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே கைது செய்யப்பட்டனர்.
தொண்டமனாறு இராணுவச் சோதனைச் சாவடிக்கு அண்மையாக அதிகாலையில் நடமாடிய நால்வரையும் இராணுவத்தினர் விசாரணை நடத்திய போதே அவர்கள் படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை தெரியவந்தது. படகு ஒன்றுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் பணம் செலுத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (R)
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026