Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்வார் என மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியிருந்தது
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்பின்படியும் வைத்தியர்களுக்கான சேவைப்பிரமாண குறிப்பின்படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் அடிப்படையிலும் வைத்தியர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சுக்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago