Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 05 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேசப் பிராந்திய விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து, இந்தியாவுக்கான முதலாவது விமானச் சேவை, ஓகஸ்ட் மாதம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுமார் 19.5 பில்லியன் ரூபாய் செலவில், பிராந்திய விமானச் சேவைகளை நடத்தக்கூடிய வகையில், பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இரு கட்டங்களாக, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வதே, இதன் முதற்கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விமான நிலையம், கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் நிர்மாணிக்கப்படும். பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, ஏ-320, ஏ-321 போன்ற பெரிய பயணிகள் விமானங்களைத் தரையிறக்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
5 hours ago