Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
எம். றொசாந்த் / 2019 மே 03 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று (03) இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பான ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குண்டு செயலிழக்க வைக்கும் படைப்பிரிவினர் நடத்திய பரிசோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டவை எனக் கண்டறியப்பட்டது. அவை இரண்டும் கண்காட்சி ஒன்றுக்குத் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago