A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 04 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
புரெவி புயலின் போது பொன்னாலை கடலில் காணாமல் போன, கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற்போன சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago